எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday 13 July 2014

தனிப்பாடல்


ஆண்டுகளாய் நகரத்தில் பழகிய திறமெல்லாம்
காலியான பிறன்மனையில் அல்லும் பகலுமாய்
ஓங்கி உலகளக்கும் உயரத்தை இலக்காக்கிக்
குப்பை கொட்டுவதே காண்.

(நகரத்தில் மிகும் குப்பைகள் குறித்தெழுதியது) - நவம்பர் 2013


செருப்புக்கும் காசின்றி கால்கடுக்க நடப்பவர்கள்
சோகமழிக்கக் கைக்காசு செலவழிக்கும் ஆமாத்மி
சேர்த்தகாசு கருப்பா மிவர்கையில் - அதிகாரம்
சேர்ந்தால் என்னாகும் கேட்கிறேன் விளக்குமாறே...

(ஆம் ஆத்மி கட்சி பல தில்லுமுல்லுகளினூடே தில்லியில் டிசம்பர் 2013 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து)





கூட்டெனச் சிலகூகைகள் மறைந்துகூவும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
மாநிலத்து தலைவரெலாம் மாய்ந்து மறுத்ததாலேயே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
உறவு என்பதில்லையென்று ராஜநாதர் சொன்னதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
தனித்துநின்று தமிழகத்தில் குறைவாய் வெல்லும்போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
தொன்மதத் தெழுச்சிவேண்டி மாந்தர்கூடி நிற்பதால்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..

(2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்த போது எழுதியது)

சிறுபான்மை வால்பிடித்து மதங்கொண்டு உளறிவரும்
குறுமனத்துக் சிறுதனத்தி லிதங்கொள்ளும் மூர்த்தியவர்
மோடியின்பால் தற்காலம் மேடைகளில் பொழியுமன்பு
வாடியதம் செல்வாக்கைக் கூடியிடும் போட்டியினால்
குலையாது வைத்திருந்து மலைபோலத் தான்குவித்த
விலைபெற்ற செல்வத்தைக் கலையாது காத்திடவே.


வாஜ்பாய் காலத்து பாஜக மோடி காலத்தில் இல்லை.  ஆகவே கூட்டணி கிடையாது என்று கூறிய கருணாநிதி, அதே நாளில் பாஜக அழைத்தால் சேருவோம் என்றும் மோடி மிக நல்லவர் என்றும் கூறிய போது எழுதியது. 2013 டிசம்பர்.

மாமலையை மடுவாக்கி மடுவினையே மேடுறுத்தி
மாபணிகள் செய்திடுவான் மாதவனைப் போற்றுவதும்
மாநிலத்தில் நம்பணியாம் மாண்பைக் காப்பதுநில
மாதாவைக் காப்பதுவாம் மாந்தரே தெளிந்திடுவீர்

இந்துவுக்கு விழிப்புணர்வு இங்குமிகத் தேவையது
இந்தப்பணி செய்வதிலே இனிசுணங்க ஏலாது
இட்டவனோ எம்மிறைவன் இங்கவனே முதலாளி
இதிலேதும் மாற்றமில்லை இங்கார்க்கு முரைத்திடுவேன்

மாதவனின் பாதையிலே மாவிடர்கள் புதிதுமல்ல
மாமனிதன் கேசவனின் மாபடையோ பேடியில்லை
மாநிலத்தில் சநாதனத்தை மேன்மையுறச் செய்வதற்கு
மாநிலத்தின் தாயவளே மனமுவந்து அருள்செய்வாள்


(ஹிந்துக்களை ஏகடியம் செய்து வீரபாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சும் அதன் பின் நடந்த கொடும் அரசியல் வித்தைகளைப் பார்த்து வருத்தத்தில் எழுதியது)

இங்கத்திய சூனியத்துக்கு இல்லாதது ஞானமொன்றே
இங்கிருக்கும் சிக்கலுக்கு இதுவெனப் புரிதலின்றி
இவர்தரும் தீர்வுகளோ இளித்திடும் பித்தளையாம்
இன்னுமா நம்புவருலகில் இவரனைய நாடகமாடியை

இவர்தீற்றிய வரைவொன்றுக் கில்லாத காப்புரிமை 
இருப்பதாகக் கூறியிவர் இல்லாத மீசைமுறுக்கி
இருந்தால் காட்டுமென இங்குபலர் கேட்டபின்னே
இதோதந்தேன் நாட்டுக்கு இங்காரும் பயன்பெறுவீர்

என்றபெரு நாடகத்தை எம்மிடையே அரங்கேற்றி
என்றுமிலாப் பெருமையை எதிர்பார்த்து அரங்கேற
என்னதான் கிடைத்ததுவோ என்றுற்று நோக்குங்கால்
எக்காள நாடகமிதே எனத்தெளிவு வந்ததுவே!

எங்கோ மேற்கினிலே எங்கெல்சும் மார்க்சுமாக 
எக்காலமும் கவைக்குதவா எண்ணத்தைக் கைக்கொண்டு
எழுதிவைத்த தத்துப்பித்தை எம்மீது திணிக்கவரும்
எகத்தாளக் கம்யூனிஸ்டு என்றிவரைத் தெளிவீரே.


(தன் ஓவியத்துக்கு வாங்காத காப்புரிமையைக் கொண்டாடிவந்த ஞாநி, எங்கே காட்டு காப்புரிமையை என்று கேட்டதும் தந்தேன் ஓவியத்தை நாட்டுக்கு என்று பின்வாங்கி அடித்த குட்டிக்கரணம் கண்டு சிரித்துக் கொண்டே 11/01/2014ல் எழுதியது)

குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பு. - செய்தி.

கண்கள்பனித்து இதயமினித்த கசப்புமருந்தின் சுவையே
மண்மீதுசிலர் ஜனநாயகத்தை ஆட்டுவிப்பதொரு கலையே
மணிமேகலை யுனக்கறிவாயலத்து முகப்பிலேயொரு சிலையே
கனியென்றமகள் திகாரென்றசிறை செல்லாதிருக்க விலையே


(காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தபின் குலாம் நபி ஆசாத்துடன் சந்திப்பும் நீண்டகாலத்துக் கூட்டணி என்ற அவரது கருத்தும் அதற்கு கருணாநிதி மறுப்பேதும் தெரிவிக்காததும் கண்டு 09/01/2014ல் எழுதியது.)
 
தைதை எனக்குதித்தாலும் தையிலே புத்தாண்டென்று
கைபிடித்த பெண்களும் கைகோர்க்கார் இவரொடு
வையகத்து வழக்கப்படி வைத்திடும் பொங்கலிலும்
கைவிரலில் தொட்டுத்தரும் கையறு நிலையவர்க்கு

பைநிறையக் காசுதரும் பைத்தியத் தொண்டர்களோ
வைகாசி என்றதுமே வையாது குவித்திடுவர்
கைபார்த்துச் சொல்லும் கைகளைப் பற்றியேதம்
வைப்புநிதி காத்திடவே வையகத்தை விற்குமிவர்

முத்தமிழை விற்றாரது முக்காலும் சத்தியமே
புரிதல் ஏதுமின்றி புலமையற்று மொழிந்துவந்த
சும்பப்பாழ் நாத்திகரொடு சுற்றித் திரிந்தழிந்து

முற்றும் மூடர்சூழ முன்னின்ற கதைகேளீர்!

(முத்தமிழ் வித்தவர், சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு ஆகிய நூல்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது குறித்து 14/01/2014 அன்று எழுதியது)